Pages

Total Pageviews

Monday, May 11, 2015

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு கடந்து வந்த பாதை

 
ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி
ஆகியோரது சொத்து குவிப்பு வழக்கு கடந்து வந்த பாதை பற்றிய விவரம்:–


1996 ஜூன்.16:– 1991 முதல் 1996–ம் ஆண்டு வரையிலான பதவி காலத்தில் ஜெய
லலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சென்னை செசன்சு கோர்ட்டில் சுப்பிரமணியசாமி மனு தாக்கல்.

1996 ஜூன்.27:– விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு நீதிபதி உத்தரவு.

1996 ஆக.14:– விசாரணைக்கு தடை
விதிக்க கோரி ஜெயலலிதா சென்னை ஐகோர்ட்டில் மனு.

1996 செப்.7:– வழக்கு விசாரணை அதிகாரியாக நல்லம நாயுடு நியமனம்.

1996 செப்.18:– ஜெயலலிதா மீது வழக்கு பதிவு.

1996 செப்.19:– ஜெயலலிதா, சசிகலா,
சுதாகரன், இளவரசி வீடுகளில் போலீசார் சோதனை.

1996 டிச.7:– ஜெயலலிதா கைது–ஊழல் வழக்கு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.

ஜெயலலிதா வீட்டில் 19 வாகனங்கள், 7,109 சேலைகள், 389 ஜோடி செருப்புகள், 214 சூட்கேஸ்கள், 26¾ கிலோ தங்க–வைர நகைகள், 1,116 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவிப்பு. தனது வருமானத்தை விட ரூ.66 கோடியே 64 லட்சத்து 42 ஆயிரத்து 318 மதிப்புள்ள சொத்துகளை வாங்கிக் குவித்ததாக ஜெயலலிதா மீது குற்றச்சாட்டு.

1997 ஜன.3:– ஜெயலலிதா ஜாமீனில்
விடுதலை; வழக்கை விசாரிக்க
சென்னையில் தனிக்கோர்ட்டு அமைப்பு– விசாரணை தொடக்கம்.

1997 அக்.1:– சொத்து குவிப்பு வழக்கு தொடர அனுமதித்த கவர்னர் பாத்திமா பீவியின் உத்தரவுக்கு எதிரான மனு உள்ளிட்ட
3 மனுக்கள் சென்னை ஐகோர்ட்டில்
தள்ளுபடி.

1999–ம் ஆண்டு நவம்பர் 19–ந்தேதி முதல் 2001–ம் ஆண்டு ஜூலை 18–ந்தேதி முடிய விசாரணை, 259 சாட்சியங்கள் பதிவு, வாக்குமூலம் அளித்தவர்களிடம்  குறுக்கு விசாரணை.

2001 மே.15:– தமிழகத்தில் தனிப்பெரும்
பான்மையுடன் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி. முதல்–அமைச்சராக ஜெயலலிதா தேர்வு.

2003–ல் ஜெயலலிதா மீண்டும் முதல்–அமைச்சராக பதவியேற்றதால் வழக்கை
வேறு மாநில கோர்ட்டுக்கு மாற்றக்
கோரி தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் சுப்ரீம் கோர்ட்டில் மனு.

2003 நவ.18:– சொத்து குவிப்பு வழக்கை கர்நாடக மாநிலத்துக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு.

2003 டிச.27:– ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்க பெங்களூருவில் தனிக்கோர்ட்டு அமைப்பு, ஏ.எஸ்.
புச்சாபுரே நீதிபதியாக நியமனம்.

2005 பிப்.19:– பி.வி.ஆச்சார்யா அரசு சிறப்பு வக்கீலாக நியமனம்.

2005 மே.9:– லண்டன் ஓட்டல் மற்றும் சொத்து குவிப்பு வழக்கு ஆகியவற்றை ஒன்றாக விசாரிக்க கோரி ஜெயலலிதா மனு. ஜெயலலிதாவின் கோரிக்கை ஏற்பு.

2005 ஜூலை.14:– லண்டன் ஓட்டல் மற்றும் சொத்து குவிப்பு வழக்கை ஒன்றாக விசாரிக்க கூடாது என கோரி க.அன்பழகன் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி. லண்டன் ஓட்டல் வழக்கு வாபஸ்.

2011 – குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெறக்கோரி அரசு சிறப்பு வக்கீல் ஆச்சார்யா மனு.

2011 அக்.20, 21:– ஜெயலலிதா நேரில்
ஆஜராகி வாக்குமூலம்.

2011 நவ.21, 22:– மீண்டும் ஜெயலலிதா நேரில் ஆஜராகி வாக்குமூலம். தொடர்ந்து சசிகலா, சுதாகரன், இளவரசி வாக்கு
மூலம்.

2012 அக்.12:– அரசு சிறப்பு வக்கீல்
ஆச்சார்யா பதவி ராஜினாமா.

2013 பிப்.2:– அரசு சிறப்பு வக்கீலாக பவானிசிங் நியமனம்.

2013 ஆக.23:– குற்றம் சாட்டப்பட்டவர்
களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி அரசு சிறப்பு வக்கீல் பவானி
சிங்கை நீக்கும்படி தி.மு.க. கர்நாடக ஐகோர்ட்டில் மனு.

2013 ஆக.26:– அரசு சிறப்பு வக்கீல் பவானி சிங்கை நீக்கி கர்நாடக அரசு உத்தரவு, நீக்கத்தை எதிர்த்து பவானி சிங் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்.

2013 செப்.30:– பவானி சிங்கை நீக்கிய
கர்நாடக அரசின் உத்தரவு சுப்ரீம்
கோர்ட்டில் ரத்து.

2014 ஆக.28:– சொத்து குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20–ந்தேதி தீர்ப்பு வழங்கப்
படுவதாகவும், ஜெயலலிதா உள்பட
4 பேரும் ஆஜராகவும் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா அறிவிப்பு.

2014 செப்.16:– சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பின் தேதி 27–ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அறிவிப்பு. பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக தனிக்கோர்ட்டை பெங்களூரு பரப்பன அக்ரஹாரத்துக்கு மாற்றியும் நீதிபதி உத்தரவு.

2014 செப்.27:– சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை, ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி, மற்ற மூவருக்கு தலா ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

2014 செப்.29:– ஜாமீன் கேட்டு கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல்.

2014 அக்.7:– ஜெயலலிதாவுக்கு கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்க மறுப்பு.

2014 அக்.17:– ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

2014 அக்.18:– ஜெயலலிதா பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

2014 டிச.8:– சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதா மேல்முறையீட்டு ஆவணங்களை தாக்கல் செய்தார்.

2014 டிச.18:– கர்நாடக ஐகோர்ட்டு சிறப்பு அமர்வு அமைத்து ஜெயலலிதா மேல்
முறையீட்டு மனுவை 3 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு.

2015 ஜன.1:– ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க தனி நீதிபதியாக குமாரசாமி நியமனம்.

2015 ஜன.14:– அரசு சிறப்பு வக்கீலாக பணியாற்றிய பவானிசிங்கை நீக்கக்கோரி க.அன்பழகன் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

2015 ஜன.19:– பவானிசிங்கை நீக்கக்கோரிய மனுவை ஐகோர்ட்டின் மற்றொரு தனி நீதிபதியும் தள்ளுபடி செய்தார்.

2015 பிப்.3:– பவானிசிங்கை நீக்கக்கோரி
க.அன்பழகன் தாக்கல் செய்த மேல்
முறையீட்டு மனுவை விசாரிப்பதில் இருந்து தலைமை நீதிபதி டி.எச்.வகேலா விலகினார்.

2015 பிப்.11:– பவானிசிங்கை நீக்கக்கோரிய க.அன்பழகனின் மேல்முறையீட்டு மனுவை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் நிராகரித்தது.

2015 மார்ச்.11:– மேல்முறையீட்டு மனு மீது மொத்த விசாரணையும் முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினமே சுப்பிரமணியசாமி தனது எழுத்துப்பூர்வ வாதத்தை பதிவு செய்தார்.

2015 ஏப்.27:– பவானிசிங்கின் நியமனத்தை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து உத்தரவு. அன்றைய தினமே க.அன்பழகன் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டது.

2015 ஏப்.28:– கர்நாடக அரசின் சிறப்பு
வக்கீலாக ஆச்சார்யா மீண்டும்
நியமனம் செய்யப்பட்டார். அன்றைய தினமே அவர் எழுத்து மூலமான வாதத்தை தாக்கல் செய்தார்.

2015 மே.8:– ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீது 11–ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஐகோர்ட்டு வெளியிட்டது.

2015 மே.11:– ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு.
 
கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்த, 919 பக்க தீர்ப்பின் முக்கிய பகுதிகள்: சொத்துக்களின் மொத்த மதிப்பு, 37.59 கோடி ரூபாய். மொத்த வருமானம், 34.76 கோடி ரூபாய். சொத்துக்களின் மொத்த மதிப்பில் இருந்து, வருமானத்தை கழிக்கும்போது, 2.82 கோடி ரூபாய் அதிகமாக வருகிறது. இதை சதவீத கணக்கில் பார்த்தால், 8.12 சதவீதம். கிருஷ்ணானந்த் அக்னிஹோத்ரி வழக்கில், சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவில், 'வருமானத்திற்கு அதிகமாக, 10 சதவீத அளவில் சொத்துக்கள் இருந்தால், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை பெற உரிமை உள்ளது' என, தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திர அரசு பிறப்பித்த சுற்றறிக்கையில், 'வருமானத்திற்கு அதிகமான சொத்து, 20 சதவீதம் அளவிற்கு அனுமதிக்கலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களின் மதிப்பு, 10 முதல் 20 சதவீதத்திற்குள் இருந்தால், அதை அனுமதிக்கப்பட்ட வரம்பாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment