Pages

Total Pageviews

Friday, February 25, 2011

புள்ளியியல் ஆசிரியர்கள்

கடந்த 33 ஆண்டுகளாக புள்ளியியல் பாடத்துக்கு புள்ளியியல் முதுகலை ஆசிரியர்களை நியமிக்காமல் புள்ளியியல் பாடத்தை புள்ளியியல் முதன்மைப்பாடம் அல்லாத பிற ஆசிரியர்களால்  பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

கோவை, ஈரோடு, வேலூர், சென்னை, புதுக்கோட்டை, திண்டுக்கல், காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, சிவகங்கை, திருவாரூர், திருநெல்வேலி ஆகிய 12 மாவட்டங்களில் 104 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் புள்ளியியல் பாடப்பிரிவு நடைபெற்று வருகிறது. இதில் 6,927 மாணவர்கள் புள்ளியியல் பாடத்தை படிக்கின்றனர்

மேல்நிலைக் கல்வியில் 1978-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை 33 ஆண்டுகளாக புள்ளியியல் முதுகலை ஆசிரியர் பணி நியமனம் செய்யாமல், புள்ளியியல் முதன்மைப்பாடம் அல்லாத ஆசிரியர்களை நியமித்து போதிக்கப்பட்டு வருகிறது

இதுகுறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி செயலர் (மேல்நிலைக்கல்வி) மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநர் (மேல்நிலைக்கல்வி) புள்ளியியல் பாடப்பிரிவில் புள்ளியியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டியும், அரசின் கொள்கை முடிவுக்கு பரிந்துரை வழங்கியும், புள்ளியியல் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு தமிழக முதல்வர் மற்றும் தமிழக ஆளுநர், உயர் கல்வித்துறை அமைச்சர் ஆகியோர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர் 

 

No comments:

Post a Comment