Pages

Total Pageviews

Friday, April 1, 2011

இந்திய மக்கள் தொகை

 மக்கள்தொகை கணக்கெடுப்பு(சென்சஸ் 2011, இந்தியாவின் 15வது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும்) சமீபத்தில் இந்தியா முழுவதும் எடுக்கப்பட்டது.2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை, மத்திய உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை முன்னிலையில், இந்திய சென்சஸ் கமிஷனர் சி.சந்திர மவுலி நேற்று  31.03.2011 வெளியிட்டார்



சமீபத்தில் எடுக்கப்பட்ட புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள்தொகை 121 கோடியாக உயர்ந்துள்ளது


  • ஆண்களின் எண்ணிக்கை 62 கோடியே 37 லட்சம். பெண்கள் எண்ணிக்கை 58 கோடியே 65 லட்சம்.
  • கடந்த பத்தாண்டுகளில் (2001 - 2011)மட்டும் மக்கள் எண்ணிக்கை 18 கோடி அதிகரித்துள்ளது
  • கடந்த 2001ம் ஆண்டு மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 21.15 சதவீதமாக இருந்தது. அது, 2011ம் ஆண்டு, 17.64 சதவீதமாக குறைந்துள்ளது
  • இந்தியாவின் மொத்த மக்கள் தொகை  உலக மக்கள்தொகையில் 17.5 சதவீதமாகும்.
  • அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில், பாகிஸ்தான், வங்கதேசம், ஆகிய நாடுகளின் மக்கள்தொகை முழுவதையும் கூட்டினால், அதை விட அதிகமாக நமது நாட்டின் மக்கள்தொகை உள்ளது.
படித்தவர்கள் எண்ணிக்கை உயர்வு:
மக்கள்தொகையில், ஏழு வயதுக்கு மேற்பட்டவர்களில் படித்தவர்கள் எண்ணிக்கை 74 சதவீதம். படிக்காதவர்கள் 26 சதவீதம்.

* 2001ம் ஆண்டில் படித்தவர்களின் எண்ணிக்கை 64.83 சதவீதமாக இருந்தது, 2011ம் ஆண்டில் 74.04 சதவீதமாக உயர்ந்துள்ளது. பத்தாண்டுகளில் மட்டும் படித்தவர்கள் எண்ணிக்கை 9.21 சதவீதம் அதிகரித்து உள்ளது.
 பெண் கல்வி உயர்வு:
2001ம் ஆண்டில் பெண்களில் 53.67 சதவீதம் பேர் எழுத, படிக்க தெரிந்தவர்களாக இருந்தனர். இது, 2011ம் ஆண்டு 65.46 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2001ம் ஆண்டு எழுத, படிக்க தெரிந்த ஆண்களின் எண்ணிக்கை 75.26 சதவீதமாக இருந்தது. இது, 2011ம் ஆண்டு, 82.14 சதவீதமாக அதிகரித்துள்ளது. பத்தாண்டுகளில் ஆண்களை விட பெண்களின் படிப்பறிவு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது
மாநிலங்களில் எழுத, படிக்க தெரிந்தவர்கள்
கேரளாவில்   93.91 சதவீதம் உள்ளனர்.
குறைவான எண்ணிக்கை உள்ள மாநிலம் பீகார். இங்கு 63.82 சதவீதம் பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர்.
அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலம்
உத்தரபிரதேசம்: 19 கோடியே 90 லட்சம் மக்கள் உள்ளனர்
மிகக்குறைவான மக்கள்தொகை
லட்சத்தீவில்: 64 ஆயிரத்து 429 பேர் உள்ளனர்
அதிக மக்கள் நெருக்கம் உள்ள பகுதி
டில்லியின் வடகிழக்கு மாவட்டம்:ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 37 ஆயிரத்து 346 பேர் வசிக்கின்றனர்
மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள பகுதி
 அருணாச்சல பிரதேசம் திபாங் பள்ளத்தாக்கு:ஒரு சதுர கிலோ மீட்டருக்கு ஒருவர் மட்டுமே வசிக்கிறார்.

No comments:

Post a Comment