Pages

Total Pageviews

Friday, August 5, 2011

தமிழக அரசின் 2011-12ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை

தமிழக அரசின்  2011-12ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை

நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டசபையில் 03.08.2011நேற்று தாக்கல் செய்தார் 

 

தமிழக அரசின் வருவாய் வரவாக, 85 ஆயிரத்து, 685 கோடி

வருவாய் செலவாக, 85 ஆயிரத்து, 511 கோடி ரூபாயாகவும்

இதனால், வருவாய் கணக்கில் பற்றாக்குறை இல்லாமல், உபரியாக, 173.87 கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மூலதனத் திட்டங்களுக்கான நிதி ரூ.15,877.58 கோடியாக ஒதுக்கப்படுகிறது. நிதிப் பற்றாக்குறையை ஈடு செய்ய நடப்பு நிதியாண்டில் பெறப்படும் நிகரக் கடன் ரூ.17,261 கோடியாக இருக்கும். எனவே ஆண்டின் இறுதியில் அரசுக்கு மொத்தக் கடன் ரூ.1,18,610 கோடியாக இருக்கும் 

அரசு செயல்படுத்த உள்ள இலவச திட்டங்கள், உயர்த்தி வழங்கப்படும் உதவித் தொகைகளுக்கு மட்டும், 8,900 கோடி ரூபாய், பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது:

  • இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்குவதற்காக, 1,250 கோடி

  • சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்துக்கு, 1,081 கோடி

  • மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்கும் திட்டத்துக்கு, 912 கோடி

  • நான்கு கிராம் தங்கம் வழங்கும் திட்டத்துக்காக, 514 கோடி

  • இலவச ஆடு, மாடு வழங்க, 191 கோடி

  • மாதவிடாய் காலங்களில், பெண்களுக்கு இலவச நாப்கின் வழங்க, 25 கோடி

  • புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்துக்காக, 150 கோடி

  • 10ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்காக, 394.04 கோடி

இந்த புதிய திட்டங்கள் தவிர, ஏற்கனவே செயல்படுத்தி வரும் திட்டங்களின் பயன்களை அதிகப்படுத்தி வழங்கவும், நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இதன்படி-

  • முதியோர் ஓய்வூதிய திட்டத்துக்காக, 2,842 கோடி

  • மகப்பேறு உதவித் திட்டத்துக்காக, 596 கோடி

  • மாணவர்களுக்கு கூடுதல் சீருடை வழங்கும் திட்டத்துக்காக, 202 கோடி

  • ஒருங்கிணைந்த கிராம கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் என்ற திட்டத்துக்காக, ஆண்டுதோறும், 680 கோடி

இந்த ஒதுக்கீடுகள் தவிர, மின்சாரம், உணவு, இலவச பஸ் பாஸ் போன்றவற்றுக்கான மானியத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது

(முந்தைய, தி.மு.க., ஆட்சியில், ஒட்டுமொத்தமாக, 7,739 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டது. அ.தி.மு.க., அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில், 9,381 கோடி ரூபாய் மானியமாக ஒதுக்கப்பட்டுள்ளது)

No comments:

Post a Comment