Pages

Total Pageviews

Thursday, February 10, 2011

கோவை மற்றும் மதுரை மாநகராட்சி விரிவு


1) கோவை மற்றும் மதுரை மாநகராட்சிகளை விரிவுபடுத்தி 100 வார்டுகளாக மாற்றுவதற்கான மசோதாவை தமிழகத் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தற்போது சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார்

2) கோவை மாநகரப் பரப்பளவை 105 சதுர கிலோ மீட்டர் அளவிலிருந்து 265 ஆக உயர்த்தவும் மதுரை மாநகரப் பரப்பளவை 54 சதுர கிலோமீட்டர் அளவிலிருந்து 105 ஆக உயர்த்தவும் நகராட்சி நிர்வாகத் துறை உத்தரவிட்டுள்ளது

3) மக்களின் அடிப்படை வசதிகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காக இந்த விரிவாக்கம் என்று கூறப்படுகிறது. 
ஆனால்,மாநகராட்சியை விரிவுசெய்து எங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மக்கள் விரும்பியதாகவோ, போராட்டம் நடத்தியதாகவோ இதுவரை செய்தி இல்லை. 
4) இப்போது தர இயலாத அடிப்படை வசதியை,விரிவாக்கத்துக்குப் பின்னர் எப்படித் தர முடியும்? தற்போது 72 வார்டுகளுக்கு ஒழுங்காக குடிநீர் விநியோகம் செய்ய முடியாத மாநகராட்சியால், எப்படி 100 வார்டுகளுக்குத் தண்ணீர் விநியோகம் செய்ய முடியும் என்கிற சந்தேகத்தை எழுப்பாமல் இருக்க முடியவில்லை.
5) மாநகராட்சியுடன் இணைப்பதுதான் பிரச்னைக்குத் தீர்வு என்பது சிக்கலை மேலும் சிக்கலாக்குமே தவிர தீர்வு தராது. இதனால் முழுக்கமுழுக்கப் பாதிக்கப்படுவது மக்களாகவே இருப்பார்கள்.  

No comments:

Post a Comment