இந்திய சினிமாவுக்கு 100 வயது
ஆனதையொட்டி நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்திலும் இன்று (21–ந் தேதி) தொடங்கி 24–ந் தேதி வரை இந்திய சினிமா
நூற்றாண்டு விழா நடைபெறுகிறது.
சென்னை நேரு உள்அரங்க விளையாட்டு
மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா கலந்து
கொண்டு நூற்றாண்டு விழாவை தொடங்கி வைக்கிறார். நிறைவு நாள் விழாவில்
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா
ஆகிய 4 மாநில முதல் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.
1895–ம் வருடம், டிசம்பர் மாதம்
28–ந்தேதி. குளிர்காலத்தின் மாலை நேரம். பாரீஸ் நகரில் உள்ள கிராண்ட் கபே
என்ற ஓட்டலின் கீழ்தளத்தின் விசாலமான ஹாலில், ஒரு பிராங்க் கட்டணம்
செலுத்திவிட்டு, 35 பேர் படபடப்புடன் அமர்ந்திருந்தார்கள்.
ஹாலின் விளக்குகள் அணைக்கப்பட்டு, இருள் உருவாக்கப்படுகிறது. எதிரில் கட்டப்பட்டுள்ள திரையில் திடீர் என்று வெளிச்சம் பரவுகிறது.
கண்ணிமைக்கும் நேரத்தில், அந்த திரையில்
பிரமாண்டமான காட்சியாக மரக்கதவுகள் விரிய திறக்கின்றன. அதன் வழியாக
வெளியேறும் தொழிலாளர்கள் கூட்டமாக நடந்து சென்று பிரதான சாலையை
அடைகிறார்கள். இது முதல் காட்சி.
அடுத்ததாக சில பெண்கள் தங்கள்
குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவதும், படகு ஒன்று அலைகள் எழுப்பிய நுரைகளுக்கு
இடையே கரையை நெருங்குவதும், ரெயில் நிலையத்தில் ஒரு ரெயில் வந்து
நிற்பதும், அதில் இருந்து பயணிகள் இறங்குவதுமாக ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத
அசையும் பட காட்சிகள் தனித்தனியாக அடுத்தடுத்து திரையிடப்பட்டு, முதல்
சினிமாவாக அரங்கேறியது.
இதை அரங்கேற்றிய பெருமைக்குரியவர்கள் லூமியர் மற்றும் லூயிஸ் லூமியர் என்ற பிரான்சு நாட்டை சேர்ந்த இரட்டையர்கள்.
தாமஸ் ஆல்வா எடிசன் தனது ஆராய்ச்சியின் பயனாக ஒரு சமயத்தில் ஒருவர் மட்டுமே பார்க்கக்கூடிய
‘கினிட்டோஸ்கோப்’ என்ற கருவியை அவர் கண்டுபிடித்தார். இது நடைபெற்ற வருடம்,
1893
சி.பிரான்சிஸ் ஜென்கின்ஸ் என்ற அமெரிக்க நாட்டு குமாஸ்தா ஒருவர் அசையும்
படத்தை பலரும் பார்க்கும் வகையில் திரையில் விழச்செய்யும் கருவி ஒன்றை
முதன்முதலாக வடிவமைத்தார். இவருடைய கண்டுபிடிப்பின் அடிப்படையிலேயே
தற்போதைய சினிமா புரொஜக்டர்கள் இயங்குகின்றன
Charles Jenkins invented a mechanical television system called
radiovision and claimed to have transmitted the earliest moving
silhouette images on June 14, 1923.
இந்திய சினிமா 100 ஆண்டுகள்
ஜாம்செட்ஜி பிரேம்ஜி மதன், பார்ஸி இனத்தை சேர்ந்த பணக்கார இளைஞர். கொல்கத்தாவில் பல்வேறு தொழில்களை செய்து வந்தார். அவற்றில், நாடக அரங்கும் ஒன்று. சினிமா திரையிடும் தொழில் நல்ல லாபம் தரக்கூடியதாக இருந்ததால், மதனின் கவனம் அந்தப் பக்கம் திரும்பியது. 1902–ல் பிரான்சில் இருந்து புரொஜக்டர்களை வரவழைத்து, கொல்கத்தாவின் மையமான பகுதிகளில் டெண்டுகள் கட்டி, மேல்நாட்டில் இருந்து வரவழைத்த துண்டு படங்களை திரையிட தொடங்கினார்.
இதன் மூலம் கிடைத்த வருமானம் மதனுக்கு நம்பிக்கை அளித்ததால், 1907–ம் ஆண்டில் கொல்கத்தாவில், எல்பின்ஸ்டன் பிக்சர் பேலஸ் என்ற திரையரங்கை கட்டினார். இதுதான் இந்தியாவில் சினிமாவுக்காக கட்டப்பட்ட முதல் திரையரங்கம்
1910–ம் வருடத்துக்குள், இந்தியாவின் பெரும்பான்மையான நகரங்களில் சினிமா தியேட்டர்கள் உருவாகின.
சிறு நகரங்கள் மற்றும் இந்தியாவின் 7 லட்சம் கிராமங்களில் உள்ளவர்களும் படம் பார்க்க வசதியாக, தற்காலிகமான டூரிங் டாக்கீசுகள் உருவாகின.
பால்கே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில், ‘ராஜா ஹரிச்சந்திரா’3–5–1913–ல் மும்பை ஒலிம்பியா தியேட்டரில் இந்தப்படத்தை திரையிட்டு காண்பித்தார். இதுவே இந்தியாவில் தயாரான முதல் படம்.
பால்கே தனது வாழ்நாளில் 44 மவுன படங்களையும், 1937–ல் ‘கங்காவதார்’ என்ற பேசும் படத்தையும் தயாரித்தார்.
சென்னைக்கு வந்த பால்கேவின் ‘ஹரிச்சந்திரா’ படத்தை பார்த்த பார்வையாளர்களில், ஆர்.நடராஜ முதலியாரும் ஒருவர். இவர் சென்னை மவுண்ட்ரோட்டில் மோட்டார் வாகனங்களுக்கான உதிரி பாகங்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். ஹரிச்சந்திரா படத்தால் கவரப்பட்ட அவர், தானும் சினிமா தயாரிப்பில் ஈடுபட விரும்பினார்.
1916–ம் ஆண்டின் இறுதியில், இவர் தனது நண்பர்கள் தர்மலிங்கம், மருதப்பன் ஆகியோரை சேர்த்துக் கொண்டு திரைப்படம் எடுக்க தீர்மானித்தார். அதன்படி, ‘கீசக வதம்’ என்ற படத்தை அவர் தயாரித்தார். ஒரே மாதத்தில் படப்பிடிப்பு முடிவடைந்தது.
பெங்களூரில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் இது, ‘பிராசஸ்’ செய்யப்பட்டு, பிரதியும் எடுக்கப்பட்டது.
1917–ம் ஆண்டு, ‘கீசக வதம்’ வெளியானது
இந்தியாவின் முதல் பேசும்படமான ‘ஆலம் ஆரா’ (இந்தி) 1931–ம் வருடம் மார்ச் மாதம் 14–ந்தேதி, மும்பையில் உள்ள மெஜஸ்டிக் தியேட்டரில் திரையிடப்பட்டது.
இந்த படத்தில், 12 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. படம் வெளியான அன்று அதிகாலையில் இருந்தே ரசிகர்கள் கூட்டம் தியேட்டர் முன்பு நிரம்பி வழிந்தது. தியேட்டர் ஊழியர்களே உள்ளே நுழைய முடியாத அளவுக்கு கூட்டம் இருந்ததால், போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுப்படுத்தினார்கள். தயாரிப்பு செலவை விட, படம் 10 மடங்கு வசூல் செய்தது.
தமிழில் தயாரிக்கப்பட முதல் பேசும் படம், ‘காளிதாஸ்.’ 21–10–1931 அன்று சென்னை தங்கசாலையில் உள்ள சென்டிரல் டாக்கீசில் திரையிடப்பட்டது
ஹரிதாஸ்
தமிழ்ப்பட உலகின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே.தியாகராஜ பாகவதர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிறை செல்வதற்கு முன் நடித்த படங்கள் 9. அவ்வளவு படங்களும் மகத்தான வெற்றிப்படங்கள். அவற்றில் தலைசிறந்த படம் ஹரிதாஸ் (1944)
யுத்த காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டின்படி 11 ஆயிரம் அடியில் தயாரிக்கப்பட்ட படம் ‘‘ஹரிதாஸ்.’’ பாகவதரின் மனைவியாக என்.சி.வசந்த கோகிலமும், வில்லியாக டி.ஆர்.ராஜகுமாரியும் நடித்தனர். பாகவதருக்கு இது மாறுபட்ட படம். படத்தின் இடைவேளை வரை ‘‘ஆன்டி ஹீரோ’’வாக தோன்றிய பாகவதர், பிற்பகுதியில் பெற்றோரை கடவுளுக்கு மேலாக மதிக்கும் நல்லவராக நடித்தார்.
‘‘மன்மத லீலையை’’, ‘‘கிருஷ்ணா முகுந்தா’’, ‘‘அன்னையும் தந்தையும்’’ முதலான பாடல்கள் மூலை முடுக்கெல்லாம் ஒலித்தன. இந்தப் படத்தை டைரக்ட் செய்தவர் சுந்தர்ராவ் நட்கர்னி.
சென்னை பிராட்வே தியேட்டரில், தொடர்ந்து மூன்று தீபாவளிகளைக் கண்ட ‘‘ஹரிதாஸ்’’, தமிழில் நீண்ட காலம் (110 வாரம்) ஓடிய படம் என்ற சாதனையை ஏற்படுத்தியது. தினமும் 2 காட்சிகள். சனி, ஞாயிறு 3 காட்சிகள்
கண்ணகி
1942–ல் வெளிவந்த ‘‘கண்ணகி’’ படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் கண்ணகியாக கண்ணாம்பாவும், கோவலனாக சின்னப்பாவும் நடித்தார்கள். கண்ணாம்பா இப்படம் மூலம் பெரும் புகழ் பெற்றார். தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட கண்ணாம்பா, தமிழ் வசனங்களை ‘கணீர் கணீர்’ என்று பேசி கை தட்டல் பெற்றார்.
சின்னப்பாவின் நடிப்பும், இப்படத்தில் சிறப்பாக அமைந்திருந்தது. தலை வெட்டப்படுவதற்கு முன், கோவலனின் மனச்சாட்சி பேசும் கட்டத்தில், முகமெல்லாம் வியர்க்க, சின்னப்பாவின் நடிப்பு மெய் சிலிர்க்கச் செய்தது.
இந்தப்படத்தில், வசனகர்த்தா இளங்கோவன் சிகரத்தைத் தொட்டார்.
ஸ்ரீவள்ளி
பாகவதர் – சின்னப்பாவைத் தொடர்ந்து, சூப்பர் ஸ்டாராக உருவானவர் டி.ஆர்.மகாலிங்கம். அவர் கதாநாயகனாகவும், குமாரி ருக்மணி (நடிகை லட்சுமியின் தாயார்) கதாநாயகியாகவும் நடிக்க, ‘‘ஸ்ரீவள்ளி’’ படத்தை எடுத்தார், ஏவி.மெய்யப்பன். புராணக் கதையை புதிய மெருகுடன் வழங்கினார். படம் சூப்பர் ஹிட்
இந்தப்படத்தின் மூலம்தான் பின்னணி பாடும் முறை வந்தது. கதாநாயகிக்குக் குரல் கொடுத்தவர் பி.ஏ.பெரியநாயகி. வசனம் எழுதி, துணை இயக்குனராகவும் பணியாற்றியவர் ப.நீலகண்டன்.
‘‘ஸ்ரீவள்ளி’’யின் வசனங்கள், இசைத் தட்டுகளாக வெளிவந்தன. திரைப்படத்தின் வசனம், இசைத்தட்டாக வெளியானது இதுவே முதல் தடவையாகும்.
மதுரை சென்ட்ரல் சினிமாவில் இப்படம் 55 வாரங்கள் ஓடியது.
‘‘1945–ல் இரண்டு லட்சம் ரூபாயில் தயாரிக்கப்பட்ட ‘‘ஸ்ரீவள்ளி’’ அதைப்போல் பத்து மடங்குக்கு மேல் எங்களுக்குச் சம்பாதித்துக் கொடுத்தது’’ என்று ஏவி.மெய்யப்ப செட்டியார் தன் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்
பராசக்திதிரை உலக வரலாற்றை எழுதும்போது ‘‘சிவாஜிக்கு முன்’’, ‘‘சிவாஜிக்குப்பின்’’ என்று குறிப்பிடலாம். அந்த அளவுக்கு திரை உலகில் சாதனை புரிந்தவர் சிவாஜி கணேசன். 1952 தீபாவளிக்கு வந்த முதல் படமான ‘‘பராசக்தி’’யிலேயே அவர் சிகரத்தைத்தொட்டார்
நாடோடி மன்னன்
கணக்கில் அடங்காத வெற்றிப் படங்களைத் தந்தவர், எம்.ஜி.ஆர். எனினும் அவரே சொந்தமாகத் தயாரித்து டைரக்ட் செய்த ‘‘நாடோடி மன்னன்’’ ரசிகர்களின் நெஞ்சிலும், நினைவிலும் ஆழப்பதிந்த படம்.
1958–ல் இப்படம் வெளிவந்தது. எம்.ஜி.ஆர். இரட்டை வேடத்தில் நடித்தார். பணத்தை வாரி இறைத்து படத்தைத் தயாரித்தார். ‘‘இப்படம் வெற்றி பெற்றால் நான் மன்னன்; தோல்வி அடைந்தால் நாடோடி’’ என்று எம்.ஜி.ஆரே சொன்னார்.
படம், வரலாறு கண்டறியாத வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர். மன்னர் ஆனார்!
நாடோடி மன்னன்
கணக்கில் அடங்காத வெற்றிப் படங்களைத் தந்தவர், எம்.ஜி.ஆர். எனினும் அவரே சொந்தமாகத் தயாரித்து டைரக்ட் செய்த ‘‘நாடோடி மன்னன்’’ ரசிகர்களின் நெஞ்சிலும், நினைவிலும் ஆழப்பதிந்த படம்.
1958–ல் இப்படம் வெளிவந்தது. எம்.ஜி.ஆர். இரட்டை வேடத்தில் நடித்தார். பணத்தை வாரி இறைத்து படத்தைத் தயாரித்தார். ‘‘இப்படம் வெற்றி பெற்றால் நான் மன்னன்; தோல்வி அடைந்தால் நாடோடி’’ என்று எம்.ஜி.ஆரே சொன்னார்.
படம், வரலாறு கண்டறியாத வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர். மன்னர் ஆனார்!
16 வயதினிலே
கல்யாணப் பரிசுக்குப் பிறகு, தமிழ்த்திரை உலகில் மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் ‘‘16 வயதினிலே.’’
புட்டண்ணா, ஏ.ஜெகந்நாதன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக இருந்த பாரதிராஜா, இப்படத்தின் மூலம் இயக்குனராக உயர்ந்து, தமிழ்த் திரைப்பட உலகில் புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்தார். இதில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி ஆகியோர் அந்தக் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து காட்டினர்.
அதுவரை சினிமாவில் செயற்கையான கிராமத்தைக் கண்ட ரசிகர்கள், முதன் முதலாக ஒரு இயற்கை கிராமத்தைக் கண்டனர். தமிழ்ப்படங்களில் மண்வாசனை கமழச் செய்த பெருமை பாரதிராஜாவையே சாரும்.
காதல் கோட்டை
‘‘அற்புதமான படம்’’ என்று எல்லோரும் ஏகோபித்து பாராட்டிய படம் ‘‘காதல் கோட்டை.’’ (1996)
கதாநாயகனும், கதாநாயகியும் பார்க்காமலே காதலித்து, பல சோதனைகளைத் தாண்டி ஒன்று சேருவதுதான் கதை.
இந்தக் கதையை, அணு அணுவாக ரசித்து, படமாக்கியிருந்தார் டைரக்டர் அகத்தியன். இதில் நடனம் இல்லை; ஸ்டண்ட் இல்லை. பம்பாய்ப் பெண்ணான தேவயானி, நடை உடை பாவனைகளில் அசல் தமிழ்ப் பெண்ணாகவே மாறி அற்புதமாக நடித்தார். அஜித், ஹீரா, மணிவண்ணன் உள்பட அனைவரும் பாத்திரத்துடன் ஒன்றி நடித்தனர்.
அகத்தியனுக்கு, சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது பெற்றுத்தந்த இப்படம், ஒரு நல்ல திரைப்படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது
சந்திரமுகி
‘‘சூப்பர் ஸ்டார்’’ ரஜினிகாந்த் ‘‘பாட்ஷா’’, ‘‘முத்து’’, ‘‘படையப்பா’’ படங்கள் மூலம் வசூல் சக்ரவர்த்தியாக உயர்ந்தபோதிலும், அவருடைய படங்களில் உன்னதமானது, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது ‘‘சந்திரமுகி.’’
சிவாஜி பிலிம்ஸ் தயாரித்த இந்தப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, பிரபு, ஜோதிகா, வடிவேலு ஆகியோர் நடித்தனர்.
பி.வாசு டைரக்ஷனில் உருவான இப்படத்தில், கதை, நடிப்பு, படப்பிடிப்பு, பாட்டு எல்லாமே சிறந்து விளங்கின. ஓட்டத்திலும், வசூலிலும் சாதனை படைத்தது.
தசாவதாரம்
பல படங்களில் நடிப்பின் சிகரத்தைத் தொட்ட கமல்ஹாசன், 10 வேடங்களில் நடித்து, மகத்தான சாதனை புரிந்த படம் ‘‘தசாவதாரம்.’’
ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத மாறுபட்ட 10 வேடங்கள். பல வேடங்களில் அவரை அடையாளம் கண்டுபிடிக்கவே முடியவில்லை. உலக அளவில்கூட, இந்த மாதிரி ஒரே படத்தில் 10 வேடங்களில் நடித்து சாதனை புரிந்தவர் எவரும் இல்லை.
No comments:
Post a Comment