Pages

Total Pageviews

Thursday, February 9, 2017

Si3 (also known as Singam 3) - Tamil Film

Cast -Suriya,Anushka Shetty,Shruti Haasan,Radhika,Soori,Nassar,Radha Ravi
Directed by Hari

Produced by Studio Green

Music Composed by Harris Jayaraj

Cinematography by Priyan

scheduled to be released on Feb 09,2017




ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்:-
இப்படத்தை காட்சிபடுத்திய விதமாக இருந்தாலும் சரி, அல்லது அதை எடிட்டிங் செய்த விதமும் நம் சீட்டை விட்டு எழுந்து கைத்தட்ட சொல்கிறது, ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டர் ஆகியோரின் கடினமான உழைப்பை திரையிலேயே கண்டதால் அவர்களுக்கு ஒரு பெரிய கைதட்டல்.
அதிலும் ஒளிப்பதிவு, தியேட்டர் திரையில் நம் கண்களை அகல விரிக்க செய்கிறது, ஓவ்வொரு காட்சியும் இதை எப்படி எடுத்தார், இந்த காட்சி அமைப்பை எப்படி யோசித்தார், என்று நினைக்கும் அளவிற்கு மிக தத்ரூபமாக அமைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் பிரியன் என்றே கூறலாம்.
அதன் பின் எடிட்டிங் சிங்கம் 3 திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே நடிகர் சூர்யா சொன்னார் "பல லட்சம் அடி காட்சிகள் பதிவு செய்தோம், ஒரு நாளைக்கு 90 க்கு மேற்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டது, பல விதமான கேமராவை வைத்து எடுத்தோம், இதுவரை என்ன என்ன கேமரா வகைகள் தமிழ் சினிமாவில் பயன்படுத்தப்பட்டதோ, அதில் தற்போது இருக்கும் லேட்டஸ்ட் வெர்ஸன் அனைத்தும் பயன்படுத்தியுள்ளோம், அதனை மிக கச்சிதமாக எடிட் செய்த வி.டி. விஜயன் மற்றும் ஜெய் ஆகியோருக்கு எனது பாராட்டுகள்” என்று கூறியிருந்தார். அவர் சொன்னது போலவே எடிட்டர்களுக்கு பாராட்டுகளை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக்கொள்வோம்.
வில்லன்ஸ்:-
M.S. ரெட்டி கதாப்பாத்திரத்தில் ஷரத் சக்ஸேனா மற்றும் விட்டல் பிரசாத் கதாப்பாத்திரத்தில் தாக்கூர் அனூப் சிங் அகியோர் நடித்துள்ளனர், இதில் ஷரத் சக்ஸேனாவுக்கு அவ்வளவாக முக்கியத்துவமும் இல்லை அவருக்கு பின்னனி குரலும் சரியாக பொருந்தவில்லை, தெலுகு படத்தில் வரும் வில்லன் போல் தோற்றமும் பல்லை கடித்துக்கொண்டு நற நற வென்று பேசுகிறார் அவ்வளவு தான்.
தாக்கூர் அனூப் சிங் கட்டுமஸ்தான உடலும், வில்லன்களுக்கே உள்ளே முகபாவனையில் மிரட்டி உள்ளார், குறிப்பாக பேசும் வசனங்கள் வட இந்தியாவிலிருந்து வந்தவர் போல் தெரியவில்லை, லோக்கல் கை போல மிக கச்சிதமாக பேசி உள்ளார். இவர் வரும் காட்சிகள் அனைத்தும் கொஞ்சம் மிரட்டலாக இருந்தாலும் தமிழ் சினிமாக்கு என்று உள்ள வில்லத்தனம் இல்லை அதில் இயக்குனர் கொஞ்சம் கவனம் செலுத்திருக்கலாம்.
அனுஷ்கா:-
சிங்கம் முதல் பாகத்தில் சூர்யாவின் காதலியாக வந்து இரண்டாம் பாகத்தில் மனைவியாகி மூன்றாம் பாகத்தின் இறுதியில் கர்ப்பமாகியுள்ளார் அடுத்த பாகத்தில் நிச்சயம் துரைசிங்கம் மற்றும் காவ்யா வின் ஜூனியரை பார்க்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது.
மற்ற கதாப்பத்திரங்கள்:-
சுருதி ஹாஸன் இன்னொரு ஹீரோயின் போல வந்தாலும் அவருக்கு மிகவும் சுருக்கமான காட்சிகள் தான் ஒரு டூயட் பாடலும் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது, ராதிகா சரத்குமார், கிரிஷ், நிதின் சத்யா, சரத் பாபு, விஜயகுமார், நாசர், சுமன், மனோரமா ஆச்சி, ராதா ரவி ஆகியோர் தங்களுக்கு கொடுத்த சிறிய கதாப்பாத்திரத்தையும் சரியாக செய்துள்ளனர்.
காமெடி:-
சூரி, ரோபோ ஷங்கர், இமான் அண்ணாச்சி ஆகியோர் இருந்தாலும் கூட காமெடி டிராக் பெரியதாக எடுபடவில்லை, அதிலும் ரோபோ ஷங்கர் எவ்வளவு சீரியஸாக நடித்தாலும் கொஞ்சம் சிரிப்புடன் கலந்தே பார்க்க தோன்றுகிறது, ரோபோ உங்களுக்கு எமோஷன் எடுபடல…
இசை:-
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமத்துள்ளார் என்ற எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகவில்லை. பின்னணி இசை காதை கிழிக்கிறது சற்று கவனம் செலுத்தி இருக்கலாம்.
படத்தின் வேகம்:-
சிங்கத்தின் இரண்டாம் பாகம் மெட்ரோ ரயில் என்றால் மூன்றாம் பாகம் Shanghai Transrapid ரயில் (சைனாவில் ஓடும் உலகிலேயே அதிவேகமான ரயில்) என்றே கூறலாம்.
அவ்வளவு வேகம் படத்தில் உள்ளது, 3 மணி நேர படமா என்று என்னும் அளவிற்கு மிக வேகமாகவும், அதே வேளையில் காட்சிபடுத்தியதில் மிதமாகவும் கையாண்டுள்ளார் இயக்குனர் ஹரி.
இயக்குனர் ஹரி:-
கத்துக்கொண்ட மொத்த வித்தையும் பயன்படுத்தி ஒரு பக்கா மாஸ் மசால கலந்து அதில் ஒரு சமூக அக்கறை கொண்ட கதைகளத்தை கமெர்ஷியலாக தந்துள்ளார்.
மொத்ததில் வெகு நாட்கள் காத்திருந்து கூண்டிலிருந்து பாய்ந்தாலும் ரசிகர்களின் மனதை மொத்தமாக வேட்டையாடியுள்ளது சிங்கம் – 3

No comments:

Post a Comment