சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சிம்லா முத்துசோழனைவிட 39,545 வாக்குகள் அதிகம் பெற்று சாதனை படைத்தார்.
நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. சார்பில் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் சிம்லா முத்துசோழன் களம் இறக்கப்பட்டார். இவர், தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சற்குண பாண்டியனின் மருமகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம் வருமாறு:–
மொத்த ஓட்டு – 2,54,498
பதிவானவை – 1,74,076
1.ஜெ.ஜெயலலிதா (அ.தி.மு.க.) – 97,218
2.சிம்லா முத்துசோழன் (தி.மு.க.) – 57,673
3.வி.வசந்தி தேவி (விடுதலை சிறுத்தைகள்) – 4,195
4.பி.ஆக்னேஷ் (பா.ம.க) – 3,011
5.எம்.என்.ராஜா (பா.ஜ.க.) – 2,928
6.ஜி.தேவி (நாம் தமிழர் கட்சி) – 2,513
7.ஜெ.எடின் புரோக் (பகுஜன் சமாஜ்) – 327
8.எம்.ஏ.மைக்கேல்ராஜ் (சுயே) – 230
9.செல்வராணி (சுயே) – 206
10.பி.மாரிமுத்து (சுயே) – 204
11.எம்.கோபி (சுயே) – 189
12.அருந்ததி ராமச்சந்திரன் (சுயே) – 177
13.டி.வேணுகோபால் (சிவசேனா) – 162
14.இ.சடயாண்டி (சோஷியலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆப் இந்தியா) – 132
15.டி.ரவி பறையனார் (இந்திய குடியரசு கட்சி) – 125
16.பி.புவனேஸ்வரி (சுயே) – 119
17.எம்.காவிரி செல்வம் (சுயே) – 104
18.என்.நம்பிராஜன் (சுயே) – 100
19.கே.ஜெயலட்சுமி (சுயே) – 99
20.எஸ்.மனோகரன் (சுயே) – 98
21.பி.பிரேம்குமார் (சுயே) – 82
22.அருந்ததி வடிவேல் முருகன் (சுயே) – 81
23.வி.மீனாட்சி சுந்தரம் (சுயே) – 80
24.கே.சந்திரசேகர் (சுயே) – 73
25.எஸ்.யுவராஜ் (சுயே) – 73
26.பொன்ராஜ் (சுயே) – 72
27.ஆப்ரகாம் ராஜமோகன் (பீப்புள் பார்ட்டி ஆப் இந்தியா) – 68
28.பி.கஜேந்திரன் (சுயே) – 63
29.ஜி.பிரவீணா (சுயே) – 63
30.ஏ.கே.சாமி (சுயே) – 61
31.வி.துரைவேல் (சுயே) – 57
32.ஜெகதீஸ்வரா ரெட்டி (சுயே) – 57
33.எம்.சுபாஷ்பாபு (அன்பு உதயம் கட்சி) – 55
34.எம்.ஆர்.முருகன் (ஜெபமணி ஜனதா கட்சி) – 52
35.என்.பாஸ்கரன் (சுயே) – 48
36.எஸ்.பிரகாஷ் (சுயே) – 48
37.எஸ்.சுரேஷ் குமார் (மக்களாட்சி கட்சி) – 42
38.எம்.சண்முகானந்தம் (சுயே) – 42
39.எஸ்.சேகர் (சுயே) – 37
40.ஆர்.எஸ்.ராஜூ (சுயே) – 35
41.வி.தங்கவேலு (உரிமை மீட்பு கழகம்) – 35
42.பி.பாஸ்கர் (சுயே) – 31
43.ஐ.மேகவாணன் (சுயே) – 29
44.ஆர்.ரமேஷ் (சுயே) – 20
45.எல்.ராஜ் (சுயே) – 28
நோட்டா – 2,873
இதில், அ.தி.மு.க., தி.மு.க. தவிர பிற அரசியல் கட்சி – சுயேச்சை வேட்பாளர்கள் டெபாசிட் கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment