A sand sculpture made for Indian Super league season 2 at the entrance to Candolim beach in North Goa
No team has recovered to claim more points from losing positions than FC Goa this year. The Gaurs came from behind to register 2-1 and 5-1 victories against Kerala Blasters FC and 3-1 and 3-2 wins against NorthEast United FC and Delhi Dynamos FC – all in the league stage, which is a testimony to the fact that Zico's men are no walkovers for Chennaiyin FC.
One big advantage for FC Goa will be playing in front of the home crowd. Goa have one of the most loud fan bases in the league and being the hotbed of football in India, the Fatorda Stadium can expect a full house.
Zico, Goa Head Coach and Marco Materazzi Chennai head coach greet each other during the pre match ISL finals joint press conference along with ISL trophy
அதிக கோல்கள் அடித்த அணி
சென்னை–கோவா அணிகள் இதுவரை 4 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் இரு அணிகளும் தலா 2 வெற்றி கண்டுள்ளன. இரு அணிகளும் சொந்த மைதானத்தில் வெற்றி பெறாமல் வெளியூர் ஆட்டத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு அரை இறுதியுடன் நடையை கட்டிய சென்னை, கோவா அணிகள் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளன.
இந்த போட்டி தொடரில் அதிகபட்சமாக கோவா அணி 32 கோல்கள் அடித்து இருப்பதுடன், கோலை நோக்கி 115 ஷாட்களையும் அடித்துள்ளது. சென்னை அணி 29 கோல்கள் அடித்து இருப்பதுடன் 114 முறை கோலை நோக்கி ஷாட் அடித்துள்ளது. சரிவில் இருந்து எளிதில் மீண்டு வரும் திறன் கொண்ட கோவா அணி, உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் விளையாடுவதால் சென்னை அணிக்கு கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ரூ.12 கோடி பரிசு
கோப்பையை வெல்ல இரு அணிகளும் தீவிரம் காட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம். இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜெயா மேக்ஸ் டெலிவிஷன்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.
இந்த போட்டியில் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.8 கோடியும், 2–வது இடம் பெறும் அணிக்கு ரூ.4 கோடியும் பரிசாக வழங்கப்படும். அதிக கோல் அடித்த வீரருக்கான தங்க ஷூவை சென்னை அணி வீரர் மென்டோஜா வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. சிறந்த கோல் கீப்பருக்கான தங்க கையுறையை கைபற்றுவதில் ஈடெல் அபோவ்லா (சென்னை), லட்சுமி காந்த் (கோவா) இடையே கடும் போட்டி நிலவுகிறது.
அரை இறுதிக்குள் நுழைந்த விதம்
சென்னையின் எப்.சி:
லீக் சுற்று:
அக்.3: 2–3 கோல் கணக்கில் கொல்கத்தாவிடம் தோல்வி.
அக்.8: 0–1 கோல் கணக்கில் டெல்லியிடம் வீழ்ந்தது.
அக்.11: 4–0 கோல் கணக்கில் கோவாவை விரட்டியடித்தது.
அக்.16: 2–0 கோல் கணக்கில் மும்பையை வீழ்த்தியது.
அக்.20: 0–2 கோல் கணக்கில் கவுகாத்தியிடம் தோற்றது.
அக்.24: 2–1 கோல் கணக்கில் புனேவை சாய்த்தது
அக்.31: 1–1 கோல் கணக்கில் கேரளாவுடன் டிரா.
நவ.5: 0–2 கோல் கணக்கில் கோவாவிடம் தோற்றது.
நவ.11: 1–2 கோல் கணக்கில் கவுகாத்தியிடம் தோல்வி.
நவ.18: 1–2 கோல் கணக்கில் கொல்கத்தாவிடம் வீழ்ந்தது.
நவ.21: 4–1 கோல் கணக்கில் கேரளாவை பந்தாடியது.
நவ.24: 4–0 கோல் கணக்கில் டெல்லியை தோற்கடித்தது.
டிச.1: 3–0 கோல் கணக்கில் மும்பையை வீழ்த்தியது.
டிச.5: 1–0 கோல் கணக்கில் புனேவை சாய்த்தது.
அரை இறுதி சுற்று:
டிச.12: 3–0 கோல் கணக்கில் கொல்கத்தாவை பதம் பார்த்தது.
டிச.16: 1–2 கோல் கணக்கில் கொல்கத்தாவிடம் தோல்வி.
எப்.சி.கோவா:
லீக் சுற்று:
அக்.4: 2–0 கோல் கணக்கில் டெல்லியை வீழ்த்தியது.
அக்.7: 1–1 கோல் கணக்கில் கொல்கத்தாவுடன் டிரா.
அக்.11: 0–4 கோல் கணக்கில் சென்னையிடம் தோல்வி.
அக்.15: 3–1 கோல் கணக்கில் கவுகாத்தியை வீழ்த்தியது.
அக்.22: 2–1 கோல் கணக்கில் கேரளாவை சாய்த்தது.
அக்.25: 0–2 கோல் கணக்கில் மும்பையிடம் தோல்வி.
அக்.30: 1–1 கோல் கணக்கில் புனேவுடன் டிரா.
நவ.5: 2–0 கோல் கணக்கில் சென்னையை வீழ்த்தியது.
நவ.8: 2–2 கோல் கணக்கில் புனேவுடன் டிரா.
நவ.17: 7–0 கோல் கணக்கில் மும்பையை துவம்சம் செய்தது.
நவ.22: 0–4 கோல் கணக்கில் கொல்கத்தாவிடம் தோல்வி.
நவ.25: 1–1 கோல் கணக்கில் கவுகாத்தியுடன் டிரா.
நவ.29: 5–1 கோல் கணக்கில் கேரளாவை தோற்கடித்தது.
டிச.6: 3–2 கோல் கணக்கில் டெல்லியை சாய்த்தது.
அரை இறுதி சுற்று:
டிச.11 0–1 கோல் கணக்கில் டெல்லியிடம் வீழ்ந்தது.
டிச.15: 3–0 கோல் கணக்கில் டெல்லியை வீழ்த்தியது.
டோனி அணியா? கோலி அணியா?
இன்னொரு வகையிலும் இந்த இறுதிப்போட்டி சுவாரஸ்யத்தை பெறுகிறது. சென்னை அணியின் இணை உரிமையாளராக இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனியும், கோவா அணியின் உரிமையாளர்களில் ஒருவராக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் அங்கம் வகிக்கிறார்கள். இதனால் டோனி அணியா, கோலி அணியா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. தங்களது அணி வீரர்களை உற்சாகப்படுத்த இருவரும் ஆட்டத்தை நேரில் பார்க்க இருக்கிறார்கள்
No comments:
Post a Comment