கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்த, 919 பக்க தீர்ப்பின்
முக்கிய பகுதிகள்: சொத்துக்களின் மொத்த மதிப்பு, 37.59 கோடி ரூபாய். மொத்த
வருமானம், 34.76 கோடி ரூபாய். சொத்துக்களின் மொத்த மதிப்பில் இருந்து,
வருமானத்தை கழிக்கும்போது, 2.82 கோடி ரூபாய் அதிகமாக வருகிறது. இதை சதவீத
கணக்கில் பார்த்தால், 8.12 சதவீதம். கிருஷ்ணானந்த் அக்னிஹோத்ரி வழக்கில்,
சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவில், 'வருமானத்திற்கு அதிகமாக, 10 சதவீத
அளவில் சொத்துக்கள் இருந்தால், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை
பெற உரிமை உள்ளது' என, தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திர அரசு
பிறப்பித்த சுற்றறிக்கையில், 'வருமானத்திற்கு அதிகமான சொத்து, 20 சதவீதம்
அளவிற்கு அனுமதிக்கலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வருமானத்திற்கு
அதிகமான சொத்துக்களின் மதிப்பு, 10 முதல் 20 சதவீதத்திற்குள் இருந்தால்,
அதை அனுமதிக்கப்பட்ட வரம்பாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment