Pages

Friday, September 27, 2013

Onaayum Aattukkuttiyum(Tamil ஓநாயும் ஆட்டுக்குட்டியும்)


Cast -Sri,Mysskin,Aditya,Writer Shaji,Neelima Rani
Directed by Mysskin

Produced by Mysskin

Music Composed by Ilaiyaraja

Cinematography by Balaji V Rangha

is scheduled for release on Sep 27,2013

'' Onaayum Aattukkuttiyum ''Audio Launch



Ananda Vikatan Review



ட்டகாசம்’ மிஷ்கின்!
படத்தில் பாடல் (அதிலும் 'மஞ்சள் சேலை’) இல்லை, அச்சுப் பிச்சு காமெடி இல்லை, பன்ச் வசனங்கள் இல்லை, ஹீரோயின் இல்லை, 'சந்தானம்’ இல்லை... இப்படிப் பல 'இல்லை’கள். ஆனால், இது இதுவரையிலான உங்களின் உச்சம் மிஷ்கின்

அடர்ந்த காட்டில் கரடியும் புலிகளும் துரத்த, தன்னால் கொல்லப்பட்ட ஓர் ஆட்டுக்குட்டியின் குடும்பத்தைக் காப்பாற்றப் போராடும் ஓர் ஓநாயின் கதையே படம்!

புலிகளின் வியூகங்களும், அதை முறியடிக்கும் ஓநாயின் ஆட்டங்களுமாக இடைவேளை வரை விறுவிறு திகுதிகுவென விரைகின்றன காட்சிகள். ஆனாலும், இது என்ன படம், ஏன் இத்தனை ஓட்டம், 'ஓநாய்-கரடி-ஆட்டுக்குட்டி’ இடையே என்ன தொடர்பு என்றெல்லாம் ஒரு மூலையில் சந்தேகங்கள் குடைந்துகொண்டே இருக்கின்றன. அந்த அத்தனை சந்தேகங்களையும் போக்க பெரிய ஒரு ஃப்ளாஷ்பேக்கை எதிர்பார்த்து நமக்குள் இருக்கும் சினிமா ரசிகன் காத்திருக்க, இரண்டு மெழுகுவத்திகளுக்கு இடையே மிஷ்கின் அதை அவிழ்க்கும் இடமும் விதமும்... அபாரம். எளிய வார்த்தைகள் மூலம் விரியும் அந்த வலியான கதை சொல்லல், நம் மனசுக்குள் விஷ§வலாக விரிவது, புது அனுபவம். நன்றி மிஷ்கின்!

'வுல்ஃப்’ பாத்திரத்தில் மிஷ்கின். ஓர் ஓநாயின் உடல் மொழியையே தனக்குள் புகுத்தியிருக்கிறார்


ஸ்ரீக்கு, இதில் மிஷ்கினுக்கு இணையான கதாபாத்திரம். ஒரு மனிதாபிமானத்தில் மிஷ்கினைக் காப்பாற்றிவிட்டு, போலீஸிடம் சிக்கிப் படும்பாட்டில் மிரட்சி, வெறுப்பு, கோபம், இயலாமை... என அனைத்து முகபாவங்களையும் காட்டி ஆச்சர்யப்படுத்துகிறார்

இருளும் ஒளியும் கலந்த இரவு சென்னையை ஒரு பூனையைப் போல கண்காணித்து திக் திக் திகில் ஊட்டுகிறது பாலாஜி வி.ரங்காவின் ஒளிப்பதிவு.

ஸ்ரீ திரையில் தோன்றும்போது பதறவைக்கும் பின்னணி இசை, மிஷ்கின் தோன்றும்போது நெகிழ்த்தி, மாற்றுத் திறனாளிகளைக் காட்டும்போது உருகவைக்கிறது. 'முன்னணி - இசைக்கோப்பில்’ அழுத்தமாக முத்திரைப் பதிக்கிறார் ராஜா

'புலி-ஓநாய்-கரடி-ஆட்டுக்குட்டி’ கதையை 'வணிக சமரசம் இல்லாமல்’ படைத்ததற்கும், 14 கொலைகள் செய்த ஒரு சீரியல் கில்லர் உயிரோடு இருக்க வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு நம் மனதை நெகிழ்த்தியதற்கும்... இந்த ஓநாயை ஆசை ஆசையாக அரவணைக்கலாம்!

No comments:

Post a Comment