மதுரையில் மக்கள் வெள்ளத்தில் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய காட்சி
தமிழ்நாட்டில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் மதுரை சித்திரைத் திருவிழா மிகவும் புகழ் பெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த திருவிழா கடந்த ஏப்ரல் 14–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான -
பட்டாபிஷேகம் ஏப்ரல் 21-ந் தேதியும்
காலை 10 மணிக்கு கிழ சித்திரை வீதி, மேற்கு ஆவணி மூல வீதி, திண்டுக்கல் ரோடு வழியாக மேலமாசி வீதி வழியாக தங்கப்பல்லக்கில் சுவாமியும், அம்மனும் வீதி உலா வந்தனர்.
பின்னர் இரவு 7.35 மணிக்கு மேல் மேளதாளங்கள் முழங்க மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெற்றது. அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் நடைபெற்ற பட்டாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
திக்கு விஜயம் ஏப்ரல் 22-ந் தேதியும்
மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 23-ந்தேதியும்
தேரோட்டம் ஏப்ரல் 24-ந்தேதியும்
வெகு விமரிசையாக நடந்தது.
மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணத்தை தொடர்ந்து அழகர் மலையில் கள்ளழகரின் புறப்பாடு ஏப்ரல் 23-ந்தேதி மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது. அதன்படி சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு, கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் நேரிக் கம்பு ஏந்தி மதுரைக்கு புறப்பட்டார். மதுரையை நோக்கி வந்த கள்ளழகர் மதுரைக்கு வந்தபோது இரவு 8.15 மணி அளவில் திடீரென சூறைகாற்றுடன் மழை கொட்டியது. அப்போது பக்தர்கள் பக்தியுடன் பெருமாளை வணங்கினர். இதனை தொடர்ந்து நேற்று இரவு 10 மணி அளவில் தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் கள்ளழகர் திருமஞ்சனம் நடந்தது. பின்னர் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த திருமாலையை சாற்றிக் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று அதிகாலை 2.30 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலில் கள்ளழகர் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். பின்னர் 3 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்கு புறப்பட்டார். முன்கூட்டியே அங்கு வந்திருந்த வீரராகவ பெருமாள் கள்ளழகரை வரவேற்றார். அதனை தொடர்ந்து சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது. அதன்படி ஏப்ரல் 25,2013 காலை 7.35 மணிக்கு பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்
No comments:
Post a Comment