விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் தொடங்கி 125 ஆண்டுகள் ஆகின்றன
(1)125 ஆவது வருட போட்டிகள் லண்டனின் விம்பிள்டன் பகுதியிலுள்ள அகில இங்கிலாந்து லான் டென்னிஸ் மைதானத்தில் திங்கட்கிழமை(20.6.11) அன்று தொடங்கின
(2)125 வருடங்களாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்ற நிலையில், 1968 ஆம் ஆண்டு முதல்தான் அதில் பரிசுத்தொகை அளிக்கும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது.
அப்போது ஆடவர் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு 2000 பவுண்ட்ஸ்களும், மகளிர் பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு 750 பவுண்டுகள் பரிசாக வழங்கப்பட்டது.
(3)ஆடவர் மற்றும் மகளிர் போட்டிகளில் வென்றவர்களிடையே பரிசுத் தொகை வித்தியாசம் 2007 ஆம் ஆண்டு முதல் முடிவுக்கு வந்தது. அந்த ஆண்டு இருசாராருக்கும் பரிசுத்தொகையாக தலா ஏழு லட்சம் பவுண்ட்டுகள் வழங்கப்பட்டன.படிப்படியாக முன்னேறி இந்த 2011 ஆண்டு பரிசுத்தொகை 11 லட்சம் பவுண்ட்ஸுகளாக அதிகரித்துள்ளது
Men's Trophy
Ladies Trophy
No comments:
Post a Comment