Pages

Friday, February 18, 2011

மின் தடை



மின் தடை குறித்து மதுரை மண்டல தலைமை பொறியாளர் ஆ. நச்சாடலிங்கம் கூறும்போது, ""கடந்த பிப்., 9ல் பவர் கிரிட்டிற்கு 9,657 மெகாவாட் தேவைபட்டது. தற்போது 10,620 மெகாவாட் தேவைப்படுகிறது. சுமார் 1,000 மெகாவாட் வரை பற்றாக்குறை உள்ளது. மதுரை மண்டலத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 70 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது

மதுரை மண்டலத்தில்(மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள்) அறிவிக்கப்பட்ட இரண்டு மணி நேர மின் தடை அமலில் உள்ளது. எனினும், அறிவிக்கப்படாத மின் தடை நகரில் கூடுதலாக ஒரு மணி நேரமும், புறநகரில் இரண்டு மணி நேரமும் அதிகரித்துள்ளது
 பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வு நேரத்தில் மின் தடையால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். வரும் மார்ச் 3 முதல் பிளஸ் 2 தேர்வு துவங்குகிறது. பிளஸ் 2 தேர்வு முடிந்ததும் மார்ச் இறுதியில் இருந்து ஏப்.,10 வரை 10ம் வகுப்பு தேர்வு நடக்கிறது. தேர்வுக்காக, மாணவர்கள் தயாராகி வருகின்றனர். காலை 6 மணிக்கே மின் தடை செய்வதால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுகள் முடியும் வரை மின் தடைக்கு விலக்கு அளிக்க வேண்டும் அதற்குமின்வாரியம்மாற்று ஏற்பாடுசெய்யவேண்டும்

No comments:

Post a Comment