Pages

Wednesday, February 9, 2011

எகிப்து மக்கள் புரட்சி




எகிப்து ஒரு மிகப்பெரிய மக்கள் புரட்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக இரும்புக் கரம் கொண்டு மக்களின் பேச்சுரிமையையும், சுதந்திரத்தையும் அடக்கி வைத்து ஒரு சர்வாதிகார ஆட்சிக்குத் தலைமை தாங்கி வந்த அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகவேண்டும் என்கிற கோரிக்கை வலுத்திருக்கிறது.




மக்கள் வெகுண்டெழுந்து தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கி இருக்கிறார்கள் என்றால் காரணம்  -
கட்டுக்கடங்காத விலைவாசி; சராசரி எகிப்து குடிமகனின் கைக்கெட்டாத உணவுப் பொருள்களின் விலையும் தட்டுப்பாடும்; பரவலாகக் காணப்படும் லஞ்ச ஊழல்; அரசின் வேவுத் துறையினரின் அட்டகாசம்; வேலையில்லாத் திண்டாட்ட நிலைமைதான்

எட்டு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் கூடிய எகிப்துதான் வட ஆப்பிரிக்காவிலும் மேற்கு ஆசியாவிலும் பெரிய நாடு. போதாக் குறைக்கு, உலகின் கிழக்குப் பகுதியையும், மேற்குப் பகுதியையும் இணைக்கும் சூயஸ் கால்வாய் எகிப்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. எகிப்தில் புரட்சி, எகிப்தில் ஆட்சிக் குழப்பம் என்றால் அது நிச்சயமாக உலகம் முழுவதும் எதிரொலிக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது.





கிப்து நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் 25 வயதுக்கும் குறைவான இளைஞர்கள்.இளைஞர்கள் தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கியபோது, அதுவரை மெளனமாக எல்லா அநீதிகளையும் சகித்துக் கொண்டிருந்த சாதாரணப் பொதுமக்கள் அவர்களுடன் தங்களை இணைத்துக்கொண்டு விட்டார்கள். சாதாரணக் கிளர்ச்சி மக்கள் போராட்டமாக வெடித்து விட்டிருக்கிறது.



 போராட்டத்தை அடக்க ராணுவத்துக்குக் கட்டளையிட்டால், நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் மக்கள் இயக்கத்தின் மீது அடக்குமுறையை ஏவிவிட நாங்கள் தயாராக இல்லை என்று ராணுவம் மறுக்கிறது
  முன்னர் துனிசியாவில் மக்கள் எழுச்சி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது. இப்போது சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிராக எகிப்து, யேமன், ஜோர்டான் நாடுகளில் மக்கள் தெருவில் இறங்கிப் போராட முற்பட்டிருக்கிறார்கள்




ஆட்சியாளர்கள் நல்லாட்சி தராமல் போனால்  நல்லாட்சி கோரி மக்கள் எழுச்சி  நிச்சயம்
 
 பதவி விலகினார்எகிப்து அதிபர் முபாரக்11.02.2011
 கெய்ரோவிலிருந்து எகிப்து அதிபர் முபாரக் வெளியேறிகெய்ரோவில் இருந்து 250 மைல் தொலைவில் செங்கடலை ஒட்டி ஷார்ம் எல்-ஷேக் என்ற இடத்தில் தமக்குச் சொந்தமான ஓய்வு இல்லத்துக்கு அவர் குடும்பத்துடன் சென்றுவிட்டதாக தகவல் Arabic Newspaper headline 'Finally he steps down'

ராணுவத்தின் கட்டுப்பாட்டில் எகிப்து?
தற்போது எகிப்து  ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.
அதிபர் முபாரக்கின் அதிகாரங்களை, துணை அதிபர் ஒமர் சுலைமானுக்கு வழங்குவதற்கும்,நேர்மையாகவும் சுதந்திரமாகவும் தேர்தலை நடத்துவதற்கும் அரசியல் சட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்வதற்கும் ராணுவம் உறுதியளித்திருக்கிறது. 
 பல்லாயிரக் கணக்கானோர் முற்றுகையிட்டிருந்த போராட்டத்தின் மையமான தாஹ்ரீர் சதுக்கத்திலிருந்து மக்கள் கலைந்து செல்லத் தொடங்கிவிட்டனர்
போராட்டம் நடந்தபோது வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை ராணுவம் அகற்றிவிட்டது
தற்போது ராணுவத்தின் கட்டுப்பாட்டில் நாடு இருப்பதாகவும், விரைவில் நாடாளுமன்றமும் அமைச்சரவையும் கலைக்கப்படும் என்றும் அல் அரேபியா தொலைக்காட்சி தெரிவித்தது
   அரசு ஊழியர்களும், பொதுமக்களும் சேர்ந்து போராட்டம் நடந்த பகுதிகளை சனிக்கிழமை 12.02.2011 சுத்தம் செய்தனர்
 எகிப்து நாட்டின் இப்போதைய அரசியல் சட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கைக் குறைவாக இருப்பதால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு
அது செயல்படாமல் நிறுத்திவைக்கப்படுகிறது என்று நாட்டின் நிர்வாகத்தை ஏற்றுள்ள ராணுவக் கவுன்சில் ஞாயிற்றுக்கிழமை 13.02.2011அறிவித்தது.

முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் அரசுக்கு எதிரான போராட்டத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையிலான பல்லாயிரக்கணக்கானோர் வெள்ளிக்கிழமை 18.02.2011 பங்கேற்ற பிரமாண்டப் பேரணி.போராட்டத்தின் மையமாக இருந்த தாஹ்ரீர் சதுக்கத்கத்தில் கூடிய பொதுமக்கள் அங்கு வெள்ளிக்கிழமை தொழுகையை நடத்தினர்


எகிப்து அதிபர் முபாரக் குடும்பத்துடன் சிறை(under house arrest) ராணுவக் கவுன்சில் 28.03.2011அறிவித்தது
 


 
 
 

No comments:

Post a Comment