Pages

Saturday, February 26, 2011

ரயில்வே பட்ஜெட் 2011-12

மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி 2011-12-ம் நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை வெள்ளிக்கிழமை 25.02.2011தாக்கல் செய்தார்.
                                                                                          

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு மம்தா பானர்ஜி தாக்கல் செய்யும் 3-வது பட்ஜெட் இது.              


                                                               
  

ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. சரக்குக் கட்டணமும் உயர்த்தப்படவில்லை( தொடர்ந்து 8-வது ஆண்டாக பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை)
 ட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
முன்பதிவுக் கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்படும்.
  • முன்பதிவுக் கட்டணம் முதல் வகுப்புக்கு ரூ.10,

  • பிற வகுப்புகளுக்கு ரூ.5 ஆகக் குறைப்பு.


    • மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகை 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
    • மூத்த குடிமக்களில் பெண்களுக்கான வயது வரம்பு 60-லிருந்து 58-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. 
    • பத்திரிகையாளர்களின் மனைவியர், ஆண்டுக்கு இரண்டு முறை பாதி கட்டணத்தில் சொந்த ஊருக்கு பயணம் செய்யலாம்
    • மாற்றுத் திறனாளிகளுக்கு சதாப்தி ரயிலிலும், ராஜதானி ரயிலிலும் கட்டண சலுகை உண்டு
    • ரயில், புறநகர் ரயில், மெட்ரோ ரயில் ஆகிய மூன்றிலும் பயணிக்கும் வகையில் ஒரு அட்டை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.இந்த அட்டைகளை முன் பதிவு மையங்களிலும், இணைய தளம் மூலமாகவும் பெற முடியும்.

    • பட்ஜெட் வருவாய் ரூ.1,06,239 கோடி.செலவு ரூ.73,650 கோடி
    • 2011-12-ம் நிதி ஆண்டில் ரயில்வே திட்டப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 57,360 கோடி. இதன் மூலம் 1,000 கி.மீ. தூரத்துக்கு புதிய ரயில் பாதை அமைப்பது, இரு வழிப் பாதை 867 கி.மீ. தூரத்துக்கு அமைப்பது, 1,017 கி.மீ. தூர மீட்டர் கேஜ் பாதைகள் அகலப் பாதைகளாக மாற்றுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்
    • நாடு முழுவதும், 1,300 கி.மீ., தூரத்திற்கு புதிய ரயில்பாதைகள் அமைக்கப்படும். இதற்கு ரூ.9,583 கோடி செலவிடப்படும்.
    • 867 கி.மீ., வரை இரட்டை ரயில்பாதை அமைக்கப்படும். இதற்கு ரூ.5,406 கோடி செலவிடப்படும்
    • 1,017 கி.மீ., தூரத்திற்கு அகலப்பாதை மாற்றம் செய்யப்படும். அதற்கு ரூ.2,470 கோடி செலவிடப்படும்
    • பின்தங்கிய மாநிலங்களான ஒரிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பிகார் ஆகியவற்றில் 19 திட்டப்பணிகளுக்காக ரூ.771 கோடி ஒதுக்கப்படும்
    • நாடு முழுவதும் உள்ள 236 ரயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவை ஆதர்ஷ் ரயில் நிலையங்கள் என்ற பெயரில், மாதிரி ரயில் நிலையங்களாக ஆக்கப்படும்
    • கேரளாவிலும், மேற்குவங்கத்திலும் பயணிகள் ரயில் போக்குவரத்து டெர்மினல் அமைக்கப்படும்
    • மேற்கு வங்கத்தில் சிங்கூரில் மெட்ரோ ரயில் பெட்டி தொழிற்சாலை அமைக்கப்படும்
    • மணிப்பூரில் டீசல் லோக்கோமோட்டிவ் ரயில் தொழிற்சாலை அமைக்கப்படும்
    • சென்னையில் ஒன்பது புறநகர் மின்சார ரயில்கள் புதிதாக இயக்கப்படும்
    • மதுரைக்கும், சென்னைக்கும் இடையில் ஒரு "துரந்தோ' ரயில் இயக்கப்படும். இது உட்பட நாடுமுழுவதும் ஒன்பது புதிய "துரந்தோ' ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும். 



     
      
     

    No comments:

    Post a Comment